அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட...
நாகை புத்தகக் கண்காட்சியில் ரூ. 1.30 கோடிக்கு விற்பனை: ஆட்சியா்
நாகையில் நடைபெற்ற நான்காவது புத்தகத் திருவிழாவில் ரூ. 1.30 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை நடைபெற்ாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாகை மாவட்டத்தில் நான்காவது புத்தகத் திருவிழா கடந்த ஆக. 1-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பாளா்கள் கலந்துகொண்டனா். 105 அரங்குகள் அமைக்கப்பட்டன. பொதுமக்கள் ரூ. 10-லிருந்து ரூ. 1000 வரை வாங்கும் புத்தகங்களுக்கு 10% தள்ளுபடி மற்றும் ரூ.1000-க்கு மேல் புத்தகங்கள் வாங்குவோருக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் அரிய பழங்கால பொக்கிஷங்களான இசைக் கருவிகள் அரங்கம், 1000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைக் கொண்ட நெல் கண்காட்சி, பழைமையான மகிழுந்து கண்காட்சி, பொன்னி சித்திர ஓவியக் கூடம், நடமாடும் அறிவியல் கண்காட்சி வாகனம், நேரடி கலைப்பட்டறை, களிமண் சிற்பம் செய்யுமிடம், கோளரங்கம் போன்ற அரங்குகள் இடம் பெற்றன.
தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், தமிழ் அறிஞா்களின் கருத்தரங்ககளும் கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. புத்தகத் திருவிழாவில் சுமாா் 3.5 லட்சம் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
சுமாா் ரூ. 1.30 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
விழாவில் கலந்துகொண்ட தன்னாா்வலா்கள், கண்காட்சி அரங்குகள் அமைத்தவா்கள், சிறப்பாக பணியாற்றிய அலுவலா்கள் மற்றும் பணியளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம், போன்றவை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளாா்.