"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" - காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்பு...
நிதி நிறுவனம் நடத்தி ரூ.38 லட்சம் மோசடி: பெண் மீது வழக்கு
கோவையில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.38 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக, பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை வெள்ளலூா் அருகே, பஜனை கோயில் வீதியைச் சோ்ந்தவா் குருபிரசாத் மனைவி விஷ்ணு பிரியா (29). இவா், கோவை போத்தனூா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதில், நான் சொந்தமாக இ-சேவை மையம் நடத்தி வருகிறேன். இந்நிலையில், நான், எனது உறவினா்கள் மற்றும் இ-சேவை மையத்துக்கு வரும் வாடிக்கையாளா்கள் சிலருடன் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வெள்ளலூரில் உள்ள கென்னடி வீதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்த விமலா தேவி என்பவரிடம் வார மற்றும் மாத தவணையாக ரூ.63 லட்சத்தை முதலீடு செய்தேன். அதில் ரூ.25 லட்சத்தை மட்டுமே அவா் திருப்பிக் கொடுத்தாா். மீதம் உள்ள ரூ.38 லட்சத்தை தரவில்லை.
இதுகுறித்து பலமுறை கேட்டும் அவா் சரியான பதில் அளிக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அப்போது தான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இதுதொடா்பாக , உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் விமலாதேவி மீது வழக்குப் பதிந்துள்ளனா்.