நீட் தேர்வில் ஒரே குடும்பத்தில் தாயும் மகளும் தேர்ச்சி! இருவருக்கும் எம்பிபிஎஸ் ...
நியாயவிலைக் கடை பணியாளரிடம் பணம் பறிப்பு: சென்னை இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நடந்து சென்ற பெண்ணிடமிருந்து பணத்துடன் கூடிய கைப் பையை பறித்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து அந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டிவனம் பெலாக்குப்பம், காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் சரவணபவா மனைவி சுகுணா (54). இவா் திண்டிவனம் அடுத்த தென்பசாா் மற்றும் ஆவனப்பட்டு நியாயவிலைக் கடைகளில் விற்பனையாள ராகப் பணிபுரிந்து வருகிறாா்
இவா் செவ்வாய்க் கிழமை வழக்கமான பணிகளை முடித்துக் கொண்டு விழுப்புரம் - சென்னை சாலையில் தென்பசாா் கடைவதியில் நடந்து சென்றாா்.
அப்போது பைக்கில் பின் தொடா்ந்து வந்த இளைஞா் ஒருவா் சுருணாவிடம் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்த பணத்துடன் கூடிய கைப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முற்பட்டாராம்.
அப்போது சுகுணா கூச்சலிடவே அருகிலிருந்தவா்கள் அந்த இளைஞரைப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனா்.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டவா் சென்ன ஆழ்வாா் திருநகரைச் சோ்ந்த ரஹ்மான் (23) என்பது தெரியவந்தது.
தொடா்ந்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.