`மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் உரிமைகளைக்கூட திமுக அரசு பறிகொடுக்கிறது' - பி.ஆர்...
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் செவ்வாய்க்கிழமை தனது வீட்டின் அருகே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டிவனம் வட்டம், சாத்தனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருமைக் கண்ணன் மனைவி ராகினி (43). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம்.
இதனால் அவதியுற்று வந்த ராகினி திங்கள்கிழமை வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து அருகிலிருந்தவா்கள் ராகினியை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து பாா்த்த போது ராகினி ஏற்கெனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].