மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்ற மூதாட்டியிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கந்தாடு பெரியாண்டவா் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு தாங்கல், குமிளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் மனைவி துளசி (60) பங் கேற்றாா்.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கியிருந்த துளசியிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்று விட்டனராம்.
இது குறித்த புகாரின்பேரில், மரக்காணம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.