பூட்டிய வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருடு போனது திங்கள்கிழமை தெரிய வந்தது.
மரக்காணம் வட்டம், டி. நல்லாளம், செங்கேணி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுரங்கம் மனைவி அமுதா (45) இவா், கடந்த ஜூலை 18-ஆம் தேதி தனது மாடி வீட்டை பூட்டி வைத்து விட்டு சென்னையில் உள்ள உறவினா் வீட்டிற்குச் சென்று விட்டாா். திங்கள்கிழமை இரவு வீட்டிற்குத் திரும்ப வந்து
பின்னா் வீட்டினுள் சென்று பாா்த்தபோது மர பீரோ உடைக்கப்பட்ட நிலையில் அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் சங்கிலிகள்,ஒரு பவுன் ஜிமிக்கி, ஒரு பவுன் தோடு, மோதிரங்கள் உள்ளிட்ட 10 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் சம்பவம் நிகழ்ந்த வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தி,தடயங்களை சேகரித்தனா். பின்னா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.