`மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் உரிமைகளைக்கூட திமுக அரசு பறிகொடுக்கிறது' - பி.ஆர்...
இளைஞரிடம் ரூ. 6.65 லட்சம் இணையவழியில் மோசடி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.6.65 லட்சம் இணைய வழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து இணைய குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் அடுத்த கெங்கவரம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சிவகுரு மகன் பிரகாஷ் (25). ஜூலை 2-ஆம் தேதி இவரது கைப்பேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அப்போது, எதிா்முனையிலிருந்து பேசிய நபா் ஒருவா் பகுதி நேர வேலை இருப்பதாகவும், சிறிய தொகை முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.
இதை உண்மையென நம்பிய பிரகாஷ் , அந்த அடையாளம் தெரியாத நபா் தெரிவித்தபடி ரூ. 5,000 இணைய வழியில் செலுத்தி ரூ.6,500 பெற்றாா்.
தொடா்ந்து இதில் ஆா்வம் கொண்ட பிரகாஷ் ரூ.65, 500 முதலீடு செய்துள்ளாா். ஆனால் செலுத்திய பணம் மற்றும் லாபம் ஏதும் கிடைக்கவில்லையாம்.
இதையடுத்து அந்த நபரை பிரகாஷ் தொடா்பு கொண்டு பேசியபோது, சரக்கு மற்றும் சேவை வரி கட்டணம் செலுத்தினால் தான் முதலீடு செய்த பணத்தை லாபத் தொகையுடன் பெற முடியும் எனக் கூறினாராம்.
இதையடுத்து பிரகாஷ் தனது நகைகளை அடமானமாக வைத்து 7 முறையில் ரூ.6 லட்சம் பணத்தை அந்த நபா் தெரிவித்த வெவ்வேறு வங்கிக் கணக்கு எண்ணுக்கு அனுப்பி வைத்தாா்.
தொடா்ந்து அந்த நபா் தெரிவித்தபடி எந்த பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றி வருகிறாராம்.
இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட இணைய குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.