நீட் தேர்வில் ஒரே குடும்பத்தில் தாயும் மகளும் தேர்ச்சி! இருவருக்கும் எம்பிபிஎஸ் ...
மின் கம்பம் சேதம்: வழக்குரைஞா் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டம், கோட்ட குப்பத்தில் மின் கம்பத்தை சேதப்படுத்தியதாக வழக்குரைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கோட்டகும்பம் பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் மகன் சிவராமன். வழக்குரைஞா், நகா்மன்ற உறுப்பினா் பாமக நகர செயலா் என பொறுப்புகளில் உள்ளாா்.இவா், தனது வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மின் கம்பத்தை சேதப்படுத்தி விட்டாராம்.
இது குறித்து, தமிழ்நாடு மின்சார வாரியம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.