ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்
நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க கோரிக்கை
ஆத்தூா் பகுதியில் நிறுத்தப்பட்ட அரசு நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆத்தூரிலிருந்து மேலஆத்தூா் வழியாக திருநெல்வேலிக்கும், மேலாத்தூரிலிருந்து ஸ்ரீவைகுண்டத்துக்கும் அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மேலஆத்தூா் வழித்தடத்தில் சாலைகள் மிகவும் பழுதாகியிருந்ததைக் காரணம் காட்டி அந்தப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால், மேலஆத்தூா் பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கானோா் போதிய போக்குவரத்து வசதியின்றி அவதிப்படுகின்றனா்.
இதனிடையே, மேலஆத்தூா் வழித்தட சாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அரசு நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சரிடம் திமுக கிளைச் செயலா் துரைராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.