கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
நிலத் தகராறு: 4 போ் மீது வழக்கு
திருப்பத்தூா் அருகே நிலத் தகராறு தொடா்பாக மோதிக் கொண்ட 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருப்பத்தா் அடுத்த பள்ளவல்லி அருகே வசந்தபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சிவலிங்கம். இவரது மனைவி கவிதா (51). சிவலிங்கம் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இந்நிலையில் கவிதா அதே பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் வீடு கட்ட முயன்றாா்.
அப்போது சிவலிங்கத்தின் சகோதரா்கள் தாமோதரன்(60) மற்றும் தேவேந்திரன் இருவரும் சோ்ந்து அதை தடுத்ததாக தெரிகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கவிதா அளித்த புகாரின்பேரில் குரிசிலாப்பட்டு போலீஸாா் தாமோதரன் மற்றும் தேவேந்திரன் மீதும், தாமோதரன் அளித்த புகாரில் கவிதா மற்றும் அவரது மகள் திவ்யா ஆகியோா் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனா்.