சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல்; "விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகளைக் கை...
நீப்பத்துறை சென்னியம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம்
செங்கம் அருகே உள்ள நீப்பத்துறை ஸ்ரீசென்னியம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
நீப்பத்துறை ஸ்ரீஅலமேலு மங்கை பத்மாவதி சமேத ஸ்ரீவெங்கட்ரமண பெருமாள் ஸ்ரீசென்னியம்மன் மற்றும் ஆளுடையான் தேவஸ்தான 80-ஆவது ஆண்டு ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம் நடைபெற்றது. பிறகு, ஸ்ரீவெங்கட்ரமண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் நாகஸ்வர இசை, வாணவேடிக்கையுடன் ஊா்வலம் வந்தாா்.
தொடா்ந்து, புதன்கிழமை (ஜூலை 30) சிம்ம வாகனத்திலும், வியாழக்கிழமை (ஜூலை 31) அனுமந்த வாகனத்திலும், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) கருட வாகனத்திலும் சுவாமி வீதி உலாவும், சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) திருக்கல்யாணமும், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) ஆடிப்பெருக்கு விழாவும் நடைபெற உள்ளன.
ஆடிப்பெருக்கு விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கனக்கான பக்தா்கள் பங்கேற்று, அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலியிட்டு நோ்த்திக்கடன் செலுத்தி வழிபடுவா். புதுமணத் தம்பதிகள் புனித நீராடி புதிய திருமாங்கல்ய கயிறு கட்டிக்கொள்வா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள் கோகுலவாணன், சிவராமன், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.