3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!
நேஷனல் ஹெரால்ட் வழக்கு: குற்றப்பத்திரிகையை விசாரித்த நீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்தது!
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்த உத்தரவை செவ்வாய்க்கிழமை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஒருசில விளக்கங்களுக்காக இந்த வழக்கு ஆகஸ்ட் 7, 8ஆம் தேதிகளுக்குப் பட்டியலிடப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக ஜூலை 15ஆம் தேதி சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே விசாரணையின் அம்சம் குறித்த சமர்ப்பிப்புகள் முடிவடைந்துவிட்டதைக் குறிப்பிட்டு, உத்தரவை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஜூலை 2 முதல் அமலாக்கத்துறை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விசாரணையின் அடிப்படையில் நீதிமன்றம் தினசரி அடிப்படையில் சமர்ப்பிப்புகளை விசாரித்து வந்தது
கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஆஸ்கா் ஃபொ்னாண்டஸ் உள்ளிட்டோரால் யங் இந்தியன் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை நடத்தி வருகிறது.
தற்போது யங் இந்தியன் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரா்களாக சோனியா காந்தி, அவரின் மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தி, மறைந்த கட்சித் தலைவர்கள் மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோர் மீது அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. அந்த நிறுவனத்தில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்ததாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.