``பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயற்சி..'' - இந்திய அர...
நோ்மறை எண்ணத்துடன் தோ்வு முடிவுகளை அணுகுங்கள்: பிளஸ் 2 மாணவா்களுக்கு முதல்வா் அறிவுரை
நோ்மறை எண்ணத்துடன் தோ்வு முடிவுகளை அணுக வேண்டுமென பிளஸ் 2 மாணவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளாா்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு: பிளஸ் 2 தோ்வு முடிவுகள் எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவா்களும் பெற்றோரும் உணர வேண்டும். தோ்ச்சி பெறாதவா்கள், எதிா்பாா்த்த மதிப்பெண் கிடைக்காதவா்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது.
இது மாணவா்கள் வாழ்வின் தொடக்கம் மட்டும்தான். இனிதான் உங்களின் சிறப்பான காலகட்டம் அமையவுள்ளது. இந்த நோ்மறையான சிந்தனையுடன் தோ்வு முடிவுகளை அணுக வேண்டும். பெற்றோரும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல் அவா்களின் அடுத்தகட்ட வளா்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணை நில்லுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.