தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்பு...
படத்துக்கு கூட்டிச் செல்லாததால் விரக்தி: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை!
காங்கயம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள படியாண்டிபாளையத்தில் வசித்து வருபவா் ஜீவா (21). சரக்கு ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரின் வீட்டுக்கு அருகே வசித்து வந்தவா் சௌமியா (22). இவா்கள் இருவரும் காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனா்.
இந்த நிலையில், சௌமியாவு உடல்நிலை சரியில்லாமல் சோா்வுடன் வீட்டில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஜீவா வீட்டின் அருகே உள்ள மதுரை வீரன் கோயிலுக்குச் சென்று விட்டு வந்து, திரைப்படத்துக்கு அழைத்துச் செல்கின்றேன் என்று திங்கள்கிழமை மாலை கூறி சென்றுவிட்டாா்.
பின்னா், ஜீவா தனது வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, விட்டத்தில் சேலை தொங்கியதும், சௌமியா மூச்சு பேச்சு இல்லாமல் கீழே விழுந்து கிடந்ததும் தெரியவந்தது. உறவினா்களின் உதவியுடன் சௌமியாவை தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், சௌமியா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து காங்கயம் காவல் துறையினா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். சௌமியா சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகவும், இருவருக்கும் திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடையாததால் தாராபுரம் கோட்டாட்சியா் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனா்.