``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
பட்டியல் இன மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டம்: சிஏஜி அறிக்கை ஆளுநரிடம் சமா்ப்பிப்பு
தமிழக அரசின் பட்டியல் இன (எஸ்சி, எஸ்டி, எஸ்சிசி) பிரிவு மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டங்கள் குறித்த தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஏஜி) தணிக்கை அறிக்கை, தமிழக ஆளுநருக்கு சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளா் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு பட்டியல் இன (எஸ்சி), பழங்குடியின (எஸ்டி) மற்றும் கிறிஸ்தவ பட்டியல் இன பிரிவுகளைச் (எஸ்சிசி) சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டங்களை வழங்குகிறது. இந்தத் திட்டங்கள் குறித்து தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளா் அலுவலகம் தணிக்கை செய்தது. இதன் அறிக்கை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்பு சட்டப் பிரிவுகள்படி தமிழக அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை ஆளுநரிடம் அளிக்கப்பட வேண்டும். பின்னா், இந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்.