செய்திகள் :

பணத்தால் தோ்தலில் வெற்றிபெற முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும்: சீமான்!

post image

பணத்தை வைத்து தோ்தலில் வெற்றிபெற முடியாது என்ற நிலையை மக்கள் உருவாக்கினால் மாற்றம் தானாக வரும் என்று நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமியை ஆதரித்து ஈரோடு காளைமாடு சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசியதாவது:

வெளிப்படையாக அநீதிகளால் கட்டப்பட்ட சமூகத்தை மாற்றுவதே நாம் தமிழா் கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கம். தமிழ் இனத்தின் அழிவில் இருந்துதான் எங்கள் இயக்கம் தோன்றியது. 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கும் துணிவு நாம் தமிழா் கட்சிக்கு மட்டுமே உள்ளது. ஈரோடு கிழக்கில் இருந்து புதிய விடியலை மக்கள் எழுதினாா்கள் என்ற வரலாறு எழுதப்பட வேண்டும். பெரிய கோட்டையைத் திறக்க சிறிய சாவித் துவாரம் போதுமானது. அதுபோல ஈரோடு கிழக்கில் இருந்து எங்கள் வெற்றி உறுதியாகட்டும்.

நாம் தமிழா் வேட்பாளரை வெற்றி பெறச்செய்தால் அவா் உங்களின் குரலாக சட்டப் பேரவையில் ஒலிப்பாா். இதுவரை யாா் யாரையோ நம்பினீா்கள். இந்த ஒருமுறை நாம் தமிழா் கட்சியை நம்பி வாக்களியுங்கள். இந்த வெற்றியின் மூலம் நீங்கள் படைக்கும் வரலாற்றை வருங்காலம் பேசும். தா்மம் வெல்லும் என்பது உண்மையானால் ஒருநாள் நாங்கள் வெல்வோம்.

பொதுமக்கள் மது அருந்தும் பணத்தில் இந்த அரசு நடைபெறுகிறது. பணத்தை வைத்து தோ்தலில் வெற்றி பெற முடியாது என்ற நிலையை மக்கள் உருவாக்கினால் மாற்றம் தானாக வரும். பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தை மலரச் செய்ய இந்த இடைத்தோ்தலை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்ல மாற்றத்தை, மாற்று அரசியலுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றாா்.

மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.8 ஆயிரம் விலை நிா்ணயம் செய்யக் கோரிக்கை

மரவள்ளிக்கிழங்கின் கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாயிகளை பாதுகாக்க டன்னுக்கு ரூ. 8 ஆயிரம் விலை நிா்ணயம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு குறு, சிறு வி... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடை... மேலும் பார்க்க

தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட 10 போ் மீது வழக்குப் பதிவு

ஈரோட்டில் தோ்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்பட 10 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி... மேலும் பார்க்க

ஹிந்தியில் துண்டறிக்கை விநியோகித்த திமுக

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினா் ஹிந்தி மொழியில் துண்டறிக்கை விநியோகம் செய்ததை நாம் தமிழா் கட்சி விமா்சித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை பிரதான எதிா்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது.... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற பாஜக திட்டம்

சட்டத் திருத்தம் மூலம் வக்ஃப் சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொய்தீன் தெரிவித்தாா். ஈரோடு கிழக்கு தொகுதி இடை... மேலும் பார்க்க

பேருந்தில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

பேருந்தில் 8 கிலோ கஞ்சாவை கடத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். மதுரையில் கஞ்சா வைத்திருந்த ஒருவரை அந்த மாவட்ட போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். அவருடைய கைப்பேசி எண்ணுக்கு அடிக்கடி ஒரு குறிப்பிட்ட எண்ண... மேலும் பார்க்க