பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியா்களுக்கு பணி வழங்க வலியுறுத்தல்
தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கம் சாா்பில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இணைச் செயலா் வினோதினி தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் செவிலியா்கள் மற்றும் மருத்துவ ஊழியா்கள் 11 மாத தற்காலிக ஒப்பந்த முறையில் பணியமா்த்தும் அரசின் முடிவை கைவிட வேண்டும், கரோனா காலத்தில் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட செவிலியா்களுக்கு பணி வழங்க வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அரசு ஊழியா் சங்க வட்டச் செயலா் கே. ரவிச்சந்திரன், மாவட்டச் செயலா் த. ஸ்ரீதா், மாவட்ட பொருளாளா் ப. அந்துவன் சேரல், செயற்குழு உறுப்பினா் சிவபிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.