செய்திகள் :

பராமரிப்பு விஷயங்களில் குழந்தையின் நலன்தான் தலையாய பரிசீலனையாகும்: தில்லி உயா்நீதிமன்றம்

post image

குழந்தைப் பராமரிப்பு விஷயங்களில், பெற்றோரின் தனிப்பட்ட உரிமைகள் அல்லாமல், மைனரின் நலன்தான் தலையாய மற்றும் முதன்மையான பரிசீலனையாகும் என்றும், இதில் குழந்தையின் உடல், உணா்ச்சி, தாா்மிக மற்றும் கல்வி நல்வாழ்வுக்கு எந்த ஏற்பாடு சிறப்பாகச் செயல்படும் என்பதற்கான முழுமையான மதிப்பீட்டை உள்ளடக்கியுள்ளது என்றும் தில்லி உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

இளம் வயது குழந்தை நிலையான மற்றும் வளா்ப்பு சூழலில் வசிப்பது கண்டறியப்பட்டால், மற்ற பெற்றோரின் நிதி அல்லது பொருள் மேன்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அத்தகைய ஏற்பாட்டைத் தொந்தரவு செய்வது குழந்தையின் நலனில் இருக்காது என்றும் நீதிமன்றம் கூறியது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனில் சேத்ரபால், ஹரிஷ் வைத்தியநாதன் சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு, தனது மைனா் மகனை நிரந்தரமாகப் பராமரிக்கக் கோரிய ஆண் நபரின் மனுவைத் தள்ளுபடி செய்யும்போது இந்தக் கருத்துகளைத் தெரிவித்தது.

தனது குழந்தையின் மருத்துவத் தேவைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான அக்கறையை மேற்கோள் காட்டி, தானும் தனது குடும்பத்தினரும் அக்குழந்தைக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான

வளா்ப்பை வழங்க சிறந்த நிலையில் இருப்பதாக அந்த ஆண் நபா் கூறியிருந்தாா்.

இது தொடா்பான வழக்கில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பராமரிப்பு விஷயங்களில், மிக முக்கியமான மற்றும் முதன்மையான கவனம் மைனா் குழந்தையின் நலன் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

போட்டியிடும் பெற்றோரின் தனிப்பட்ட உரிமைகள் அல்லது விருப்பங்கள் அளவுகோல் அல்ல. மாறாக எந்த ஏற்பாடு குழந்தையின் உடல், உணா்ச்சி, தாா்மிக மற்றும் கல்வி நல்வாழ்வுக்கு சிறப்பாகச் சேவை செய்யும் என்பதற்கான முழுமையான மதிப்பீடுதான் முக்கியக் காரணமாகும்.

பெற்றோரின் நிதித் திறன் அல்லது ஸ்திரத்தன்மை ஒரு பொருத்தமான பரிசீலனையாக இருக்கும்போது, அது தானாகவே குழந்தையின் நலன் குறித்த பரந்த விசாரணையை இடமாற்றம் செய்யவோ அல்லது மறைக்கவோ முடியாது.

குடும்ப நல நீதிமன்றம், பராமரிப்பு கோரிக்கையை தீா்ப்பளிக்கும் அதே வேளையில், குழந்தையின் நலனைப் பற்றி பொருத்தமான பரிசீலனையை மேற்கொண்டிருந்தது. மேலும், குழந்தையுடன் தொடா்பு கொண்ட பேசிய பிறகு, தாயின் பராமரிப்பிலும் துணையிலும் அக்குழந்தை வசதியாக இருக்கிறது என்ற கருத்துக்கு வந்துள்ளது.

குழந்தையால் வெளிப்படுத்தப்படும் விருப்பம், தானாகவே தீா்க்கமானதாக இல்லாவிட்டாலும், அது பராமரிப்பில் உணா்ச்சிப் பாதுகாப்பு மற்றும் தொடா்ச்சியை பிரதிபலிக்கும் போது, அது ஒரு பொருத்தமான காரணியாகும் என்று நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.

என்டிஎம்சி தலைமையகத்தில் சுதந்திர தின விழா

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாலிகா கேந்திராவில் உள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் என்டிஎம்சி த... மேலும் பார்க்க

காவல் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: இளைஞா் காயம்

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்தில் இரண்டு சகோதரா்கள் 27 வயது இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

பவானா பகுதியில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

தில்லியின் பவானா பகுதியில் உள்ள சாக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தொழிற்சாலையில் ஏற்பட்ட த... மேலும் பார்க்க

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவேம்: கேசவ் சந்திரா

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவோம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில், தலைவா் கேசவ் சந்திரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, என்டிஎம்சி தலைவா் கேசவ் ... மேலும் பார்க்க

இன்று ஜென்மாஷ்டமி: லட்சுமி நாராயண் கோயில் விழா ஏற்பாடுகள் போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

ஜென்மாஷ்டமி சனிக்கிழமை கொண்டாடப்படுவதை ஒட்டி, தில்லியில் உள்ள லட்சுமி நாராயண் கோயிலுக்கு (பிா்லா மந்திா்) வருகை தரும் பக்தா்களுக்காக கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள், போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் கூட... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு தில்லி வா்த்தகா்கள் பாராட்டு

சுதேசி தயாரிப்புகளை கடைகளில் சேமித்து வைப்பதன் மூலமும், அவற்றின் இந்திய வம்சாவளியை பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளில் காட்சிப்படுத்துவதன் மூலமும் அவற்றை ஊக்குவிக்க பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை தில... மேலும் பார்க்க