கர்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ் விநியோகம்; அரசு மருத்துவமனை முற்றுகை - திருப்பூ...
’பலாப்பழம் தான் சாப்பிட்டோம்..’ - மது பரிசோதனை முடிவால் பேருந்து ஓட்டுநர் அதிர்ச்சி! - என்ன நடந்தது?
கேரளா மாநிலம், பத்தனம்திட்டாவின் பந்தளம் கே.எஸ்.ஆர்.டி.சி. டிப்போவில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. பலாப்பழம் சாப்பிட்ட பேருந்து ஓட்டுநர் மது அருந்தியதாக பரிசோதனையில் தவறுதலாக முடிவு வந்ததுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வழக்கமான மது பரிசோதனையின்போது, பலாப்பழம் சாப்பிட்ட ஒரு ஓட்டுநர் மது அருந்தியதாக பரிசோதனையில் வந்துள்ளது. பரிசோதனை மீட்டரில் 0-லிருந்து 10 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், தான் மது அருந்தவில்லை என கூறியிருக்கிறார்.

என்ன நடந்தது?
ஒரு பேருந்து ஊழியர் தனது வீட்டிலிருந்து பலாப்பழங்களை டிப்போவிற்கு கொண்டு வந்து சக ஊழியர்களுடன் பகிர்ந்து சாப்பிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
பலாப்பழங்களை சாப்பிட்ட மூன்று ஊழியர்களிடம் எடுத்த பரிசோதனையிலும் அவ்வாறு முடிவுகள் வந்துள்ளன. இதையடுத்து, அதிகாரிகள் பரிசோதனை மீட்டரைச் சோதித்தனர்.
ஒரு அதிகாரி முதலில் பரிசோதனை செய்தபோது மீட்டர் 0-ஐ காட்டியது. ஆனால் அவர் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு மீண்டும் பரிசோதனை செய்தபோது மீட்டர் மது அருந்தியதாகக் காட்டியிருக்கிறது.
இறுதியாக, பலாப்பழமே இந்தத் தவறான முடிவுக்கு காரணம் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பலாப்பழம் மது பரிசோதனை முடிவுகளைப் பாதிக்கும் என்பது இந்த சம்பவத்தால் தெரியவந்துள்ளது.