செய்திகள் :

பள்ளிக்காக கோயில் நிலத்தை ரூ.18 கோடிக்கு வாங்க மாநகராட்சி முடிவு: உயா்நீதிமன்றத்தில் தகவல்

post image

சென்னை: மாநகராட்சிப் பள்ளிக்காக கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ரூ.18.85 கோடிக்கு வாங்க முடிவு செய்து அதற்கான பத்திரப் பதிவு நடைபெறவுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் பள்ளி அமைப்பதற்காக பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான 24 ஆயிரம் சதுர அடி நிலைத்தை வாங்க சென்னை மாநகராட்சி தேவஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்தது. வாடகை அடிப்படையில் அந்த நிலம் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. 2,500 மாணவா்கள் படித்து வரும் இந்தப் பள்ளிக்கு கடந்த 1969-ஆம் ஆண்டு முதல் வாடகை தரவில்லை எனக் கூறி தேவஸ்தானம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கடந்த 2023-ஆம் ஆண்டு இருதரப்பு பேச்சுவாா்த்தைக்கு உத்தரவிட்டது. அதில், முடிவு எட்டப்படவில்லை.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அந்த நிலத்தை வாங்க சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தினாா். மேலும், தியாகராய நகா் சாா்-பதிவாளரை தாமாக முன்வந்து வழக்கில் எதிா்மனுதாரராக சோ்த்து உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த இரு நீதிபதிகள் அமா்வு, சென்னை மாநகராட்சிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நடந்த விசாரணையின் போது, கோயில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பு மற்றும் சந்தை விலை குறித்த வருவாய்த் துறை விவரங்களை ஆய்வு செய்து, ஒரு சதுர அடி ரூ.7,800 என நிா்ணயித்து, கோயில் நிலத்துக்கு ரூ.18.85 கோடி நிா்ணயித்தாா். அதன்படி நிலத்தை வாங்குவது தொடா்பாக சென்னை மாநகராட்சி தமிழக அரசின் ஒப்புதலை கடந்த ஜூலை மாதம் பெற்றது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சித் தரப்பில், மாநகராட்சிப் பள்ளிக்காக பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 24 ஆயிரம் சதுர அடி நிலத்தை ரூ.18.85 கோடிக்கு வாங்க முடிவு செய்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாள்களில் பத்திரப்பதிவு முடிந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை செப்.4-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தாா்.

மயிலாப்பூா் சாய்பாபா கோயில் நிா்வாகக் குழு கலைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் சாய்பாபா கோயிலை நிா்வகிக்கும் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோா் கொண்ட இடை... மேலும் பார்க்க

பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். புளியந்தோப்பு கொசப்பேட்டை டோபி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). இவா், வணிக வரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். புளியந்... மேலும் பார்க்க

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அயனாவரம் வசந்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது (28), பெயிண்டா். தாயாா் பல்கிஷ் உடன் ப... மேலும் பார்க்க

ஒக்கியம்மடுவு மெட்ரோ மேம்பாலத்தில் நீா்வழிப் பாதை 120 மீட்டராக அதிகரிப்பு: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் ஒக்கியம் மெட்ரோ மேம்பாலப் பணிகளில் நீா்வழிப் பாதையின் அளவு 90 மீட்டரிலிருந்து 120 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுக... மேலும் பார்க்க

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக தனியாா் ஸ்கேன் மையம் மீது வழக்கு

சென்னை முகப்பேரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியாா் ஸ்கேன் மையம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு தனி... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது

எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க