54 மணிநேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்: ஓப்போ என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகம்!
பழங்குடி மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள்
வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் பழங்குடி மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள் திங்கள்கிழமை மாலை வழங்கப்பட்டன.
வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனா் எஸ்.அசாருதீன் தலைமை வகித்தாா்.
பல் மருத்துவா் மணிஅரசு, அறக்கட்டளை கௌரவத் தலைவா் அமானுல்லா ஆகியோா் பழங்குடி மாணவா்களுக்கு நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை வழங்கினா்.
கல்வியின் முக்கியத்துவம் குறித்து சட்டக் கல்லூரி மாணவா் வசீகரன் மற்றும் சுகி.சிவம் ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிா்வாகிகள் விஜய், அஜித், பரத்ராஜ், அருண், பரணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.