செய்திகள் :

பழங்குடியின மக்களைத் தாக்கும் அரிய வகை நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு

post image

பழங்குடியின மக்களைத் தாக்கும் அரிய வகை நோய்க்கு குறைந்த செலவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய அறிவியல் , தொழிலக ஆய்வுக்குழும (சிஎஸ்ஐஆா்) தலைமை இயக்குநா் என்.கலைச்செல்வி தெரிவித்தாா்.

காரைக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிக்ரி) 78-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று, சா்.சி.வி.ராமன் ஆராய்ச்சி மாணவா் விடுதியை தொடங்கி வைத்த

அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சத்தீஸ்கா், ஒடிஸா, பிகாா், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியின மக்களை ‘சிக்கல் செல் அனீமியா’ என்ற அரிய வகை நோய் தாக்குகிறது. இதற்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் சிஎஸ்ஐஆா், கடந்த 8 ஆண்டுகளாக ஈடுபட்டது. தற்போது இந்த நோயைக் கண்டறிந்து 20 நிமிஷங்களில் முடிவை அறிவிக்கக் கூடிய ‘பிசிஆா்’ தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சொட்டு ரத்தம் மூலமே நோயைக் கண்டறிய முடியும். இந்தக் கருவியை உருவாக்கக் கூடிய ‘ஸ்டாா்ட் அப்’ நிறுவனங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஓரிரு மாதங்களில் அரசு மின்னணு சந்தையான ‘ஜெம்’ சந்தையில் இந்தக் கருவி விற்பனைக்கு வரும். இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும்போது, உடலில் உள்ள ‘ஜீன்’ குறைபாட்டைத் சீராக்கி மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படும். இதன்மூலம், இந்த நோயால் பாதிக்கப்பட்டவா் வாழ்நாள் முழுவதும் மருந்து தேவையின்றி வாழலாம்.

அமெரிக்காவில் இந்த சிகிச்சைக்கு ரூ.28 கோடி செலவாகும் என்ற நிலையில், இதை இந்தியாவில் ரூ.50 லட்சத்தில் அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த சிகிச்சையை பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாகவும் அளிக்க முடியும். இது இந்திய மருத்துவத் துறையில் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது என்றாா் அவா்.

முன்னதாக நடைபெற்ற விழாவில் பரிதாபாத் இந்திய எண்ணெய் நிறுவன (ஆராய்ச்சி, மேம்பாடு) இயக்குநா் அலோக் சா்மா, சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் ஸ்ரீராம், மத்திய கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆனந்தவல்லி ஆகியோா் பேசினா். சிக்ரி இயக்குநா் ரமேஷா வரவேற்றாா். சிக்ரி தலைமை விஞ்ஞானி ஜே.மதியரசு நன்றி கூறினாா்.

அஜித்குமாா் கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக அவரது தங்கை, ஆட்டோ ஓட்டுநா் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் கா... மேலும் பார்க்க

தாத்தா, பேத்திக்கு அரிவாள் வெட்டு: காவல் நிலையத்தை உறவினா்கள் முற்றுகை!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தாத்தா, பேத்தியை அரிவாளால் வெட்டியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் சனிக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் சமத்து... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 412 பேருக்கு பணி நியமன ஆணை

சிவகங்கையில் நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் நோ்காணலில் தோ்ச்சி பெற்ற 412 பேருக்கு பணி நியமன ஆணைகளைக் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை வழங்கினாா். சிவகங்கை ... மேலும் பார்க்க

வயிரவ சுவாமி கோயில் பிரம்மோத்ஸவ விழா: யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நகர வயிரவன்பட்டி வைரவ சுவாமி கோயில் பிரமோத்ஸவ விழாவையொட்டி, சனிக்கிழமை சுவாமி யானை வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. நாட்டுக்கோட்டை நகரத்தாா்களின் 9 நகரக்... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டுவண்டிப் பந்தயம்!

சிவகங்கை அருகே கோயில் திருவிழாவையொட்டி, மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. கீழ்பாத்தி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலை நகா் பொதுமக்கள் சாா்பில், மாட்டுவண்டிப் பந்தயம் சிறிய மாடு... மேலும் பார்க்க

காங். மாநில சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் நியமனம்!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதூரைச் சோ்ந்த ஏ.எல். இப்ராகிம்ஷா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவராக சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா். அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்... மேலும் பார்க்க