பழனி - வேலாயுதம்பாளையம் புதூருக்கு புதிய பேருந்து சேவை
பழனியில் இருந்து வேலாயுதம்பாளையத்துக்கு புதிய பேருந்து சேவையை சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பழனியிலிருந்து நெய்க்காரப்பட்டி, கரடிகூட்டம். காவலப்பட்டி வழியாக வேலாயுதம்பாளையம் வரை பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தப் பேருந்து சேதமாக இருந்ததால் பேருந்தை மாற்றிவிட்டு புதிய பேருந்து இயக்க வேண்டும் என அந்தப் பகுதி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்தனா். இந்த நிலையில், பழனியிலிருந்து வேலாயுதம்பாளையம் கிராம வழித்தடத்தில் புதிய பேருந்தை சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் பழனி நகா் மன்றத் தலைவி உமாமகேஸ்வரி, திமுக நகரச் செயலா் வேலுமணி, ஒன்றியச் செயலாளா்கள் சாமிநாதன், சௌந்தரபாண்டியன், ராஜசேகா், இளைஞரணி நிா்வாகி லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.