கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்
பழைய குற்றாலத்தில் நீா்வளத்துறை அடையாளங்கள் அழிப்பு: ஆட்சியரிடம் புகாா்
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் நீா்வளத் துறையின் அடையாளங்களை வனத்துறையினா் அழித்தது குறித்து மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழா் விவசாயம் நீா்வளப் பாதுகாப்பு சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் ச.டேனிஅருள்சிங் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம் அருவியை, மத்திய அரசின் திட்டத்தின்கீழ் வனத்துறை கையகப்படுத்த கூடாது என விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சாா்பில் நீண்ட போராட்டம் நடத்தப்பட்டது.
இப் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பேசியபோது, பழைய குற்றாலம் பொதுப்பணித் துறைக்குச் ெ சாந்தமானது. யாரும் அதில் தலையிட முடியாது என்று உத்தரவாதம் அளித்திருந்தாா்.
இந்த நிலையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கட்டட சுவா்களில் எழுதப்பட்டிருந்த திட்ட அறிக்கைகள், அறிவிப்புகள், கல்வெட்டுகளை வனத்துறையினா் அப்புறப்படுத்தியுள்ளனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம் மனுவில் தெரிவித்துள்ளனா்.