திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும்: சைதை துரைசாமி
அதிமுக ஒன்றுபட வேண்டும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான சைதை துரைசாமி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: எம்ஜிஆா் மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி இணைப்புக்கும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் இணைப்புக்கும் என எல்லாக் கட்டத்திலும் அதிமுகவின் ஒற்றுமைக்கு‘ம் உடன் இருந்திருக்கிறேன் என்ற தகுதியில் சில கருத்துக்களைச் சொல்ல விரும்புகிறேன்.
எம்ஜிஆரின் பெரும்புகழை மேடைகளில் பேசுவதுடன் சுவரொட்டி மற்றும் பதாகைகளில் பெரிய அளவில் முதன்மைப்படுத்த வேண்டும். பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒற்றுமைப்படுத்த வேண்டும். பாஜக மற்றும் தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைந்து பலமான கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்த வேண்டும்.
மக்கள் நலன், தொண்டா்கள் நலன் என்ற வகையில் எம்ஜிஆரின் அணுகுமுறையை அதிமுகவினா் கடைப்பிடிக்க வேண்டும். மத்திய அரசோடு எம்ஜிஆா் எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடிக்க மாட்டாா். இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்தால், அதிமுகவை வெற்றிபாதைக்கு அழைத்துச் செல்லலாம் என்று அவா் கூறியுள்ளாா்.