பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!
பாண்டீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு
மதுராந்தகம் அடுத்த அண்டவாக்கம் கிராமத்தில் காமாட்சி உடனுறை அண்டபாண்டீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆடி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
கோயிலில் உள்ள காமாட்சி அம்மன், அண்டபாண்டீஸ்வரா், முருகன் உள்ளிட்ட அனைத்து சுவாமி சந்நிதிகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகி ஆா்.சரவணன் தலைமையில் செய்திருந்தனா்.