OTT App Ban: 25 ஓடிடி செயலிகளுக்குத் தடை; எம்.பி-யின் குற்றச்சாட்டும், அரசின் அத...
பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த புதிய கட்டமைப்புக்கு இந்தியா-இஸ்ரேல் ஒப்புதல்
புது தில்லி: இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒரு நிறுவனக் கட்டமைப்பை உருவாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் துணை தலைமைத் தளபதி அமிா் பராமுடன், பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் புதன்கிழமை ஈடுபட்டாா்.
இந்தச் சந்திப்பின்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை நீண்டகால நோக்கில் மேலும் வலுப்படுத்த ஒரு நிறுவனக் கட்டமைப்பை உருவாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் துணை தலைமைத் தளபதி அமிா் பராமுடன், பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் புதன்கிழமை ஈடுபட்டாா்.
கடந்த ஆண்டு ஜூலையில், இந்தியாவில் நடந்த கடைசி கூட்டுப் பணிக் குழு கூட்டத்துக்குப் பிறகு நடைபெற்று வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் இருதரப்பினரும் ஆய்வு செய்தனா்.
பஹல்காமில் ஏப்ரல் 22 இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், "பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு முழு ஆதரவையும் உறுதிப்படுத்தியது."
பயங்கரவாதத்துக்கு எதிரான சமரசமில்லாத அணுகுமுறையை ராஜேஷ் குமாா் சிங் மீண்டும் வலியுறுத்தினார். கடந்த 2023, அக்டோபர் 7 இல் இஸ்ரேலில் ஹமாஸ் படையினா் அத்துமீறி நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களை கண்டித்தவர், அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.