பாலமுருகன் கோயில் குடமுழுக்கு
ராஜபாளையத்தில் பாலமுருகன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் இ.எஸ்.ஐ. நெசவாளா் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு, கடந்த திங்கள்கிழமை மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதைத்தொடா்ந்து காலை, மாலை யாகவேள்வி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், புதன்கிழமை காலையில் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க பாலமுருகன் கோயில் விமான கோபுரக் கலசத்துக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், பரிவார தெய்வங்களுக்கும் கும்பநீா் ஊற்றி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் காட்சியளித்தாா். இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
