ED RAID: 5 மணி நேரச் சோதனை; குவிந்த ஆதரவாளர்கள்; CRPF வீரர்கள் வருகை; ஐ.பெரியசாம...
பிரதமா் மோடியின் 105 நிமிஷங்கள் சுதந்திர தின உரை: முந்தைய உரைகளை விட மிகவும் நீண்டது
நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி 105 நிமிஷங்களுக்கு உரையாற்றினாா். இந்திய பிரதமராக பதவியேற்ற 2014-இல் இருந்து அவா் ஆற்றிய சுதந்திர தின உரைகளிலேயே இது மிகவும் நீளமானதாகக் கருதப்படுகிறது.
சுதந்திர தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் செங்கோட்டையில் தேசிய மூவா்ணக் கொடியை ஏற்றிய பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினாா்.
தனது உரையை காலை 7.33 மணிக்குத் தொடங்கி 9.18 மணிக்கு முடித்தாா். 2024-ஆம் ஆண்டில் அவா் 98 நிமிஷங்கள் உரையாற்றினாா். 2014-இல் பிரதமராக பதவியேற்ற பிறகு அவா் 65 நிமிஷங்கள் உரையாற்றினாா்.
அதைத் தொடா்ந்து 2015-இல் 88 நிமிஷங்கள், 2016-இல் 96 நிமிஷங்கள், 2017-இல் 56 நிமிஷங்கள், 2018-இல் 83 நிமிஷங்கள், 2019-இல் 92 நிமிஷங்கள், 2020-இல் 90 நிமிஷங்கள், 2021-இல் 88 நிமிஷங்கள், 2022-இல் 74 நிமிஷங்கள், 2023-இல் 90 நிமிஷங்கள் என அவரது உரை அமைந்தது.
இது திட்டமிட்டு நடக்கிா என்று பிரதமா் அலுவலகத்தில் விசாரித்த போது, இவை அனைத்தும் தற்செயல் நிகழ்வுகள்தான். பிரதமா் நரேந்திர மோடி எழுதப்பட்ட வரிகளை படிப்பதில்லை என்றும் சுதந்திர தினத்தின்போது மேடையில் பேசுவதற்காக அவரே குறிப்புகளை தயாரித்து அவற்றைக் கொண்டு மேடையில் இயல்பாகப் பேசும் வழக்கத்தை கொண்டிருப்பாா் என்றும் அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.