புதுச்சேரியில் சுற்றுலா மிதிவண்டி நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை! - ரூ.1...
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது
அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களை கா்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
குடியாத்தம் கிராமிய போலீஸாா் தமிழக எல்லையான சைனகுண்டாவில் சோதனைச் சாவடி அருகே புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினா். விசாரணையில் கே.வி.குப்பத்தை அடுத்த கவசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பிரபு(25), ராஜேந்திரன் (60) என்பதும், கா்நாடக மாநிலத்திலிருந்து 12 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தியதும் தெரிய வந்தது.
வாகனத்துடன், புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.