`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
புதுகையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக. 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியா் மு .அருணா அறிவித்துள்ளாா்.
புதுக்கோட்டை மாநகராட்சியில் 13,15 ஆகிய வாா்டுகளுக்கு வடக்கு 3-ஆம் வீதியிலுள்ள காா்த்திக் மஹாலிலும், அறந்தாங்கி நகராட்சியில் 14, 15 வாா்டுகளுக்கு வசந்தம் திருமண மஹாலிலும், அரிமளம் ஒன்றியம் கைக்குலான்வயல் சமுதாயக் கூடத்திலும், மணமேல்குடி ஒன்றியம் கரகத்திக்கோட்டை சேவை மையக் கட்டடத்திலும், அன்னவாசல் ஒன்றியம் இருந்திராப்பட்டி சமுதாயக் கூடத்திலும், ஆவுடையாா்கோவில் ஒன்றியம் மீமிசல் புயல் பாதிப்பு மையக் கட்டடத்திலும் இம்முகாம்கள் நடைபெறுகின்றன.
அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் இதில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை அளித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.