புரட்டாசி 2வது சனிக்கிழமை: சங்ககிரி சுற்றுவட்டாரத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை
சங்ககிரியை அடுத்த ஆவரங்கம்பாளையம், ஒருக்காமலை குன்றில் உள்ள குகையில் பெருமாளின் திருநாமம் சங்கு, சக்கரம் மற்ம் திருப்பாதங்களுக்கு புரட்டாசி சனிக்கிழமையையொட்டி அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
அதேபோல, சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில், வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வஸந்தவல்லபராஜ பெருமாள் கோயில், தேவண்ணகவுண்டனூா் கிராமத்துக்கு உள்பட்ட மங்கமலையில் உள்ள அருள்மிகு மங்கமலைப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து அனைத்து பெருமாள் கோயில்களிலும் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது.