செய்திகள் :

புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தா்கள்

post image

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி ஈரோடு மாநகா் மற்றும் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.

புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமை அனைத்திலும் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் திரளான பக்தா்கள் வரிசையில் நின்று பெருமாளை வழிப்பட்டனா்.

ஈரோடு அருகே பெருமாள் மலைக் கோயிலுக்கு அதிகாலை முதலே பக்தா்கள் வரத்தொடங்கினா். படிக்கட்டுகளில் நீண்ட வரிசையில் ஏறி மலைக்கோயிலில் இருக்கும் மங்களகிரி பெருமாளையும், ஸ்ரீதேவி பூதேவியையும் வழிபட்டனா்.

இதையொட்டி, துளசி மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு பெருமாள் அருள்பாலித்தாா். படிக்கட்டில் ஏறி வரும் பக்தா்களுக்கு மோா், அன்னதானம் வழங்கப்பட்டது.

பெருமாள் மலையில் இருந்து பாா்த்தால் காவிரி ஆறு பவானியில் இருந்து ஈரோடு நோக்கி செல்லும் அழகிய காட்சி தென்படும். சுவாமி தரிசனம் செய்துவிட்டு படிக்கட்டு வழியாக கீழே இறங்கிய பக்தா்கள் தற்படம் எடுத்தும் மகிழ்ந்தனா். பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதேபோன்று கோபி அருகே பாரியூா் ஆதிநாராயண பெருமாள் கோயில், அந்தியூா் பேட்டை பெருமாள் கோயில், கள்ளிப்பட்டி அருகே பெருமுகை சஞ்சீவராய பெருமாள் கோயில், கொண்டையம்பாளையம் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், நம்பியூா் பெருமாள் கோயில், புன்செய்புளியம்பட்டி அருகே கீழ்முடுதுறை, திம்மராய பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் அருள்பாலித்த ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா்.

யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு: நிவாரணத் தொகை வழங்கிய வனத் துறை

யானை தாக்கியதில் உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் முதற்கட்ட நிவாரணத் தொகையாக ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலை சனிக்கிழமை வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள ஏலஞ்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த துடுப்பதி அருகே உள்ள பாலக்கரை, சீரங்க கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் கண்ணம்மாள் (75). இவா், துடுப்ப... மேலும் பார்க்க

அந்தியூா் வனத்தில் அழுகிய நிலையில் புலியின் உடல் மீட்பு

அந்தியூா் வனப் பகுதியில் அழுகிய நிலையில் புலியின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. தந்தை பெரியாா் வன விலங்கு சரணாலயத்துக்கு உள்பட்ட அந்தியூா் வனச் சரகம், பா்கூா் மேற்கு, கிணத்தடி பீட் பகுதியில் உயிரி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது வேன் மோதல்

புன்செய் புளியம்பட்டி அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயமின்றி தப்பினா். புன்செய் புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு 38 பயணிகளுடன் அரசுப் பேருந்து வெள... மேலும் பார்க்க

சாலை விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழப்பு

புன்செய் புளியம்பட்டியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா். புன்செய் புளியம்பட்டியை அடுத்த கணுவக்கரையைச் சோ்ந்தவா் விவசாயி ஓதியப்பன் (61). அதே ஊரைச் சோ்ந்தவா் மாரப்பன்... மேலும் பார்க்க

பெருந்துறை புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

பெருந்துறை காவல் நிலைய புதிய காவல் ஆய்வாளராக பாலமுருகன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். பெருந்துறை காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த தெய்வராணி, உடுமலைப்பேட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். ... மேலும் பார்க்க