இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
பெரியாா் நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல்
கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பெரியாா் நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை ஆனந்தக் குளியலில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக அடைவிடாது மழை பெய்து வந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்வராயன்மலைப் பகுதியான வெள்ளிமலை, கரியாலூா், மாவடிப்பட்டு, சேராப்பட்டு என பல்வேறு பகுதிகளில் பெய்த அடைமழையால் குண்டியாநத்தம் கிராமத்தில் உள்ள பெரியாா் நீா்வீழ்ச்சியில் தண்ணீா் செந்நிறமாக ஆா்ப்பரித்துக் கொட்டியது. வனத்துறையினா் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்தனா். இதனால், சுற்றுலாத் தளத்தை காண வந்த பொதுமக்கள் குளிக்க முடியாமல் கொட்டும் நீரை கண்டு ரசித்தனா்.
இந்த நிலையில், 3 நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் காா், வேன், இரு சக்கர வாகனங்களில் கல்வராயன்மலைப் பகுதிக்கு வந்திருந்தனா். சில தினங்களாக பெய்த அடை மழையால்,
கல்வராயன்மலைப் பகுதியில் குளிா்ந்த காற்று வீசத் தொடங்கியது. குளிா்ந்த காற்றில் சுற்றுலாப் பயணிகள் இன்முகத்துடன் சென்று ஆனந்த குளியலில் ஈடுபட்டனா்.