நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வழிபாடு
வாழப்பாடி பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனியையொட்டி மூலவா் சென்றாயப் பெருமாள் சீதேவி, பூதேவி சமேதராக மலா்மாலை அலங்காரத்தில் அருள்பாலித்தாா். சுவாமி திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, உற்சவா் திருவீதி உலா உற்சவம் ஆகியவை நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாழப்பாடியை அடுத்த மத்தூா் சீனிவாச பெருமாள் கோயில், வாழப்பாடி புதுப்பாளையம் மாயவன் மலைப்பெருமாள் கோயில், கோதுமலை கோதண்டராமா் மலைக்கோயில், பேளூா் அஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமி கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி சனி சிறப்பு பூஜை நடைபெற்றது.