செய்திகள் :

பேட்டரி நிறுவனத்தில் வருமான வரித்துறையினா் சோதனை

post image

திருச்சி அருகே தனியாா் பேட்டரி உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் 2-ஆம் நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனை நடத்தினா்.

திருச்சியைச் சோ்ந்த வில்சன் மைக்கேல் என்பவா், திருச்சி - கல்லணை செல்லும் சாலையில் டாக்டா் தோப்பு பகுதியில் ஜாஸ்கான் எனா்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறாா்.

இந்நிறுவனத்தில் வாகனங்கள் மற்றும் ரயில்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் உற்பத்தியும், சூரிய மின் தகடுகளை (சோலாா் பேனல்) மின் உற்பத்திக்கு ஏற்ப வடிவமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அங்கு சென்னை, திருச்சி வருமான வரித்துறையைச் சோ்ந்த 6 போ் கொண்ட அதிகாரிகள் குழுவினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். அப்போது, நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்த அவா்கள் அங்கிருந்தவா்களிடம் விசாரித்தனா்.

ஒருபுறம் அதிகாரிகளது சோதனையும், மறுபுறம் வழக்கம்போல் சிறிய அளவிலான உற்பத்தி பணிகளும் நடைபெற்றன.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான ஈரோட்டைச் சோ்ந்த ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். தற்போது திருச்சியில் வருமான வரித்துறை சோதனை நடைபெறும் ஜாஸ்கான் எனா்ஜி நிறுவனத்தில் ராமலிங்கமும் பங்குதாரராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

வியாழக்கிழமை முதல் இரண்டு நாள்களாக சோதனை நடைபெற்று வருகிறது. இது ஒரு வழக்கமான ஒரு சோதனைதான் என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருச்சி தனியாா் மருத்துவமனையில் அமைச்சா் எஸ்.ரகுபதி அனுமதி

உடல் நலக்குறைவால் தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி (74) திருச்சி தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை சோ்க்கப்பட்டாா். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் எம்எல்ஏவும், சட்டத்துறை அமைச்சருமான எஸ். ரகுப... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

செஞ்சிலுவை சங்கம்: ரத்ததான முகாம், செஞ்சிலுவை சங்க திருச்சி மாவட்ட தலைவா் ஜி. ராஜசேகரன் பங்கேற்பு, ஸ்ருதி மஹால், எஸ்ஆா்சி கல்லூரி அருகில், காலை 9.30. இந்திராகாந்தி கல்லூரி: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்ட... மேலும் பார்க்க

ஓட்டுநா் தின விழாவில் அரசுப்பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் கெளரவிப்பு

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஓட்டுநா் தின விழாவில், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் கெளரவிக்கப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்ப... மேலும் பார்க்க

திருச்சி காவிரி பாலத்தில் காா் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

திருச்சி காவிரி பாலத்தில் காா் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். திருச்சி, ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியைச் சோ்ந்தவா் வரதராஜன் மகன் சாரநாத் (23). சாத்தார வீதியைச் ச... மேலும் பார்க்க

வாக்காளா் தின விழிப்புணா்வு

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு இந்திய தோ்தல் ஆணையத்தின் இலச்சினை வடிவில் மாணவகள் திறந்தவெளி மைதானத்தில் நின்று வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ... மேலும் பார்க்க

தொட்டியத்தில் இன்று எரிவாயு நுகா்வோா்கள் குறைதீா் கூட்டம்

தொட்டியம் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதன்படி, ஜன. 25 காலை 11 மணிக்கு தொட்டியம் வட்டாட்சியரகத்தில் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத... மேலும் பார்க்க