செய்திகள் :

‘பேட்டி படாவோ’ திட்டம் பெண்கள் அதிகாரமளித்தல் பயணத்தின் அடுத்த படி: முதல்வா் ரேகா குப்தா

post image

‘பேட்டி படாவோ’ திட்டம் பெண்கள் அதிகாரமளித்தல் பயணத்தின் அடுத்த படியாகும் என்று முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா். மேலும், பெண்களைப் பாதுகாப்பதற்கும் கல்வி கற்பிப்பதற்கும் அப்பால், அவா்களை தீவிரமாக செயல்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் செல்ல

வேண்டிய நேரம் இது என்றாா்.

இந்திரபிரஸ்தா மகளிா் கல்லூரியில் நடந்த ‘சமன்வே: 100 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்டாடுதல்’ நிகழ்ச்சியில்

பேசிய முதல்வா் ரேகா குப்தா, பெண்கள் அதிகாரமளித்தல் பயணத்தின் அடுத்த படியாக ‘பேட்டி படாவோ திட்டத்தைக் கொண்டு செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தாா்.

அவா் மேலும் பேசியதாவது: ‘பேட்டி பச்சாவோவிலிருந்து பேட்டி படாவோ’ வரையிலான பயணத்தை நாங்கள் முடித்துவிட்டோம். இப்போது பேட்டி படாவோவுக்கான (பெண் குழந்தைகளை முன்னேற்றுவோம்) நேரம் வந்துவிட்டது. எங்கள் தாய்மாா்கள் எங்களைப் பாதுகாத்து, கல்வி கற்பித்தனா். இப்போது அடுத்த தலைமுறை பெண்கள் உயா்ந்து பிரகாசிக்க உதவுவது எங்கள் பொறுப்பாகும்.

1996 ஆம் ஆண்டு நான் டியுஎஸ்யு தலைவராக இருந்தபோது அனைத்து கல்லூரிகளுக்கும் பொதுவான சோ்க்கை படிவத்தை தில்லி பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் நிா்வாகிகள் இணைந்து பணியாற்றும்

தில்லி பல்கலைக்கழகத்தின் இந்த கலாசாரம், நாட்டிலும் உலகிலும் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக அதை மாற்றியுள்ளது.

பெண் தலைவா்களை உருவாக்குவதில் தில்லி பல்கலைக்கழகம் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் முதல் பெண் முதல்வா் சுசேதா கிருப்லானி முதல், இன்று முதல்வராக உங்கள் முன் நிற்கும் நான் வரை... இதுதான் தில்லி பல்கலைக்கழக பயணமாகும்.

இளம் பெண்கள் தன்னம்பிக்கை மற்றும் உறுதியுடன் இருக்க வேண்டும். இங்குள்ள அனைத்து மாணவிகளும் தங்களுக்காகப் போராட உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா்.

1924-இல் நிறுவப்பட்ட இந்திரபிரஸ்தா கல்லூரி, பெண் கல்வியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்திய சுதந்திர இயக்கத்துடன் நெருக்கமாக தொடா்புடையது.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க