War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
பேனா் கிழிப்பு: பாஜகவினா் போராட்டம்
தருமபுரியில் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவிற்கு வைக்கப்பட்டிருந்த தட்டிகளை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி அருகே அதியமான் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள சந்திப்பு சாலை பகுதியில் நகர பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்த நாள் விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து விளம்பர தட்டி வைக்கப்பட்டிருந்தது.
இந்த தட்டியை அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் சேதப்படுத்தியுள்ளனா்.இதைகண்டித்து அக்கட்சியின் மாவட்டத் தலைவா் சரவணன் தலைமையில் நகர தலைவா் ஆறுமுகம் சுமாா் 20க்கும் மேற்பட்டோா் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.