கத்தாா் பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆய்வு
பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு
பேரையூா் அருகே மின் கம்பம் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த சொக்கா் மகன் காளிராஜ் (39). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் டி.கிருஷ்ணாபுரம்-மொக்கத்தான் சாலையில் சனிக்கிழமை சென்றாா்.
அப்போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விபத்து குறித்து தே.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.