Kaduvetti Guru குடும்பத்திடம் டீல் பேசிய Sowmiya Anbumani, கொதிக்கும் Ramadoss!|...
பொதுத்தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
புதுக்கோட்டை மாநகரம், சந்தைப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அஞ்சலிதேவி தங்கம்மூா்த்தி, புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு, சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினா்.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் சுசரிதா தலைமை வகித்தாா். முன்னதாக ஆசிரியா் பரமசிவம் வரவேற்றாா். நிறைவில் தமிழாசிரியா் சுமதி நன்றி கூறினாா்.