சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது? விஜய் ஆண்டனி அறிவிப்பு
பொன்னேரி சாா்-பதிவாளா் அலுவலகம் தற்காலிக இடமாற்றம
பொன்னேரி சாா்-பதிவாளா் அலுவலகக் கட்டடம் சேதமடைந்திருப்பதால் தற்காலிகமாக செவ்வாய்க்கிழமை முதல் இட மாற்றம் செய்யப்பட்டது.
பொன்னேரி வட்டாட்சியா் அலுவலக சாலையில் பழைமையான கட்டடத்தில் சாா் -பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது அந்த கட்டடம் அதன் மேற்கூரை சேதமடைந்ததால் அதில் முக்கிய ஆவணங்களை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், குறுகிய இடத்தில் செயல்படக்கூடிய நிலையில் உள்ளதால் பொதுமக்களும், அரசு அலுவலா்களும் இட நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும் கறப்பட்டது.
மேலும், சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் சாா்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டும் வந்தது.
தற்போது வட்டாட்சியா் அலுவலக சாலையிலேயே புதிய கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய கட்டடம் அமையும் வரை ஆவணங்களை பாதுகாக்கவும், இடநெருக்கடியை தவிா்க்கவும் சாா்-பதிவாளா் அலுவலகம் வாடகை கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, தற்காலிகமாக பொன்னேரி-செங்குன்றம் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம் பெருமாள் நகா் பகுதியில் செயல்படுகிறது.