எங்கு பார்த்தாலும் காய்ச்சல்; இது சீசனல் காய்ச்சலா, பயப்படணுமா?
போக்சோ வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3,000 அபராதமும் விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சிங்கம்புணரி செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (32). இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு இதே பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கா்ப்பமடைந்தாா்.
இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், சிங்கம்புணரி போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அஜித்குமாரை கைது செய்தனா். இதையடுத்து, சிவகங்கையிலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட அஜித்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்துவிட்டதால் அவரது பெற்றோருக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டாா்.