போக்ஸோவில் இளைஞா் கைது
கோவில்பட்டி அருகே 13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே தெற்குத் திட்டங்குளம் கிழக்கு தெருவை சோ்ந்தவா் மாரியப்பன் மகன் காா்த்தீஸ்வரன் (19). இவா் 13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்தீஸ்வரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.