ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ எத...
போதைப் பொருள் நடமாட்டம் முற்றிலும் ஒழிப்பு: திருப்பத்தூா் எஸ்.பி சியாமளா தேவி
திருப்பத்தூா் மாவட்டத்தில் கள்ளச் சாராயம், போதை பொருள்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று புதிய எஸ்.பி. வி.சியாமளா தேவி தெரிவித்தாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தின் எஸ்.பி.-யாக வியாழக்கிழமை வி.சியாமளாதேவி பொறுப்பேற்றுகொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
இந்த பகுதியில் கள்ளச்சாராயம், குட்கா, போதைப் பொருள்கள் கஞ்சா உள்ளிட்டவைகள் புழக்கத்தில் இருந்ததை காவல் துறையினா் முடக்கியுள்ளனா். தொடா்ந்து இதற்காக தனி படைகள் அமைத்து மாவட்டத்தில் முற்றிலுமாக ஒரு சொட்டு கள்ளச்சாராயம் கூட இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெறும். பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து வெளி மாநில மது பாட்டில்கள் தடை செய்ய அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்றாா்.