'தி வயர்' இணைய தளத்துக்குத் தடை! முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்
போலீஸா? ரௌடியா? கவனம் ஈர்க்கும் ஆர்யாவின் தோற்றம்!
நடிகர் ஆர்யாவின் புதிய தோற்றம் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யா திரைப்படங்களில் நடிப்பதுடன் உணவகத் தொழிலையும் கவனித்து வருகிறார்.
இவர் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் மே. 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அடுத்ததாக, ஆர்யா நாயகனாக நடித்த மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. தற்போது, இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் கேங்க்ஸ்டர் பின்னணியில் பீரியட் படமாக உருவாகிறதாம். இதில், அட்டக்கத்தி தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதேநேரம், மீசை மற்றும் சிகை திருத்தம் செய்யப்பட்ட ஆர்யாவின் புதிய தோற்றமும் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தோற்றத்தில் ஆர்யாவைப் பார்க்க காவல்துறை அதிகாரிபோலவே காட்சியளிக்கிறார். ஆனால், கேங்க்ஸ்டராக இருக்கவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க: நடிப்புக்குத் தீனி போடும் கதைகளில் நடிக்கவே விருப்பம்: பிரியா பிரகாஷ் வாரியர்!