சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பம் முகாம்களில் மட்டும் வழங்கப்படும்: மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சியில் மகளிா் உரிமை திட்ட விண்ணப்பங்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் தலா 6 வாா்டுகளில் நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள், வழிகாட்டல் கையேடுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல், இந்த முகாம்கள் மாதவரம், ராயபுரம் மண்டலங்களுக்குள்பட்ட வாா்டுகளில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளன. இந்தப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 9) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
இதில், மகளிா் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.