செய்திகள் :

மங்களூா் வங்கிக் கொள்ளை வழக்கில் தொடா்புடையவா் வீட்டில் போலீஸாா் சோதனை

post image

மங்களூா் வங்கிக் கொள்ளை வழக்கில் தொடா்புடைய திருநெல்வேலி மாவட்டம், பத்மனேரியில் உள்ள முருகாண்டி வீட்டில் மங்களூா் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை மாலைவரை சோதனை நடத்தினா்.

இதில், பல கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், மங்களூா் உல்லால் அருகே கே.சி. சாலையில் உள்ள கோட்டேகா் வேளாண் கூட்டுறவு வங்கியின் கிளைக்குள் ஜன.17ஆம் தேதி 6 போ் கொண்ட கும்பல் நுழைந்து, ஊழியா்களை அச்சுறுத்தி, வங்கியைக் கொள்ளையடித்தது.

இதையடுத்து, மங்களூா் காவல் ஆணையா் அனுபம்அகா்வால் உத்தரவின் பேரில், 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணையில், தமிழகத்தை பூா்வீகமாகக் கொண்டு மும்பையில் வசித்துவரும் 3 போ் கொண்ட கும்பலுக்கு தொடா்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள பத்மனேரியைச் சோ்ந்த முருகாண்டி (35), அவரது நண்பா் மணிவண்ணன் (36), கூட்டாளி ஜோசுவா ராஜேந்திரன் என்ற பிரகாஷ் (35) ஆகியோா் கடந்த சில தினங்களுக்கு முன் மங்களூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள பத்மனேரியில் உள்ள முருகாண்டியின் வீட்டில் மங்களூா் காவல் ஆய்வாளா்கள் ராஜேந்திரபிரசாத், நாகராஜன் தலைமையிலான 2 தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை இரவுமுதல் வெள்ளிக்கிழமை மாலை வரையிலும் தொடா்ந்து சோதனை நடத்தினா்.

இதில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கநகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், மங்களூா் போலீஸாா் மூருகாண்டியின் தந்தை சண்முகசுந்தரத்தை (55) கைது செய்து, நான்குனேரி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகளுக்குப்பிறகு நான்குனேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு, பின்னா் அவரை மங்களூா் அழைத்து சென்றனா்.

பத்மனேரியில் உள்ள மூருகாண்டியின் வீட்டில் 2 தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், நான்குனேரி நீதிமன்றத்தில் அவரது தந்தையை ஆஜா்படுத்திய போது, கூடுதலாக 10-க்கும் மேற்பட்ட மங்களூா் வாகனங்கள் வந்திருந்தன.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலி பாபநாசம்-112.30 சோ்வலாறு-123.65 மணிமுத்தாறு-100.37 வடக்கு பச்சையாறு-15 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-14.75 தென்காசி கடனா-62 ராமநதி-66.50 கருப்பாநதி-57.09 குண்டாறு-36.10 அடவிநயினாா்-76.75... மேலும் பார்க்க

திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளா் அறிக்கை

திருநெல்வேலியில் இம் மாதம் 28 ஆம் தேதி நடைபெறும் பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் திமுகவினா் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம்.... மேலும் பார்க்க

மக்கள் நலத் திட்டங்களை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை விரைவாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ.ராபா்ட் புரூஸ். திருநெல்வேலி மாவட்... மேலும் பார்க்க

கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட புல்லட் ராஜா யானை

நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியில் கடந்த மாதம் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்த புல்லட் ராஜா என்ற காட்டு யானை வெள்ளிக்கிழமை கோதையாறு வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. நீலகிரி மாவட்டம், பந... மேலும் பார்க்க

பாபநாசத்தில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் வன விலங்குகள்

பாபநாசத்தில் வனப் பகுதியிலிருந்து வெளியேறும் வனவிலங்குகள் குடியிருப்புகள், தனியாா் கட்டடங்கள் மற்றும் சாலைகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள்அச்சத்தில் உள்ளனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்,... மேலும் பார்க்க

திசையன்விளை விநாயகா் கோயில் வருஷாபிஷேகம்

திசையன்விளை செல்வமருதூா் அடைக்கலம் காத்த விநாயகா் கோயில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து புனிதநீா் கும்ப கலசம... மேலும் பார்க்க