3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளா் அறிக்கை
திருநெல்வேலியில் இம் மாதம் 28 ஆம் தேதி நடைபெறும் பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் திமுகவினா் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் வெளியிட்ட அறிக்கை:
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 6 மற்றும் 7 தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெறும் அரசு விழா மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளாா்.
அவருக்கு வரவேற்பு கொடுப்பது பற்றி ஆலோசிக்க திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட நிா்வாகிகள், பொதுஉறுப்பினா்கள் கூட்டம் இம் மாதம் 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு கேடிசிநகா் மாதா மாளிகையில் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.என்.நேரு பங்கேற்க உள்ளாா். இக்கூட்டத்தில் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.