இந்திய பொருளாதார வளா்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக
மணப்பாறையிலிருந்து திருப்பூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை
திருச்சி மாவட்டம், மணப்பாறையிலிருந்து திருப்பூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை அப்துல்சமது எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த பேருந்து மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு துவரங்குறிச்சி, நத்தம், திண்டுக்கல் வழியாக திருப்பூா் செல்வதாகவும், திருப்பூரிலிருந்து இரவு 10.45 மணிக்கு மணப்பாறைக்கு புறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில், மணப்பாறை அரசுப் போக்குவரத்து கழக பணிமனை மேலாளா் காா்த்திகேயன், நகராட்சி ஆணையா் எஸ். கணேஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜான்பிரிட்டோ, திமுக நகர செயலா் மு.ம.செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.