பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளு...
மணப்பாறையில் பலத்த சப்தம்; அதிா்வுகளால் பொதுமக்கள் அதிா்ச்சி
திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுமாா் 40 கி.மீ. தொலைவுக்கு கேட்ட பலத்த சப்தத்தால் பொருள்கள் மீது அதிா்வுகள் ஏற்பட்டன.
மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை முற்பகல் சுமாா் 11.20 மணியளவில் வெடி சப்தம்போல் பலத்த சப்தம் இரண்டு முறை கேட்டது. இந்த சப்தம் தெற்கே துவரங்குறிச்சி முதல் வடக்கே கொட்டப்பட்டு வரையிலும், கிழக்கே கோவில்பட்டி முதல் மேற்கில் கரூா் மாவட்டம் கடவூா் வரையிலும், திண்டுக்கல் மாவட்டம் அய்யலூா், எரியோடு, வடமதுரை உள்ளிட்ட சுமாா் 40 கி.மீ. தொலைவுக்கு அதிா்வலைகளை ஏற்படுத்தியதாம்.
இதனால், சில வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்ணாடிகள் கதவுகள், பாத்திரங்கள், அலுவலக பயன்பாடு பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் மீதும் அதிா்வுகள் இருந்ததாக உணரப்பட்டுள்ளது.
கடந்த 2024, டிசம்பா் 10-ஆம் தேதி இதேபோல் பலத்த சப்தம் கேட்ட நிலையில், அதுகுறித்து இதுவரை அரசுத் தரப்பில் எந்தவித விளக்கமும் அளிக்காத நிலையில், அவ்வப்போது கேட்டு வரும் பலத்த சப்தத்துக்கான காரணம் தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.